கண்ணோட்டம்

மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பீஎல்சி ஆனது கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகின்றது. இக்கம்பனியானது 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இல. நிதிச்சட்டத்தின் கீழ் நிதிக் கம்பனி உரிமம் பெற்றுள்ளதுடன் கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கம்பனியானது புத்தாக்கமிக்க பல்வேறு நிதிசார் தீர்களினை வழங்குவதில் இலங்கையின் நிதிச் சேவைத்துறையிலுள்ள நிறுவனங்களில் மிகவும் முதன்மை வாய்ந்த ஒரு நிறுவனமாகும். வாகன நிதிக் குத்தகை வசதிகள், குத்தகை வசதிகள், நிலையான வைப்புக்கள், நுண்பாக நிதித் தீர்வுகள், வியாபாரக் கடன்கள், தனிப்பட்ட கடன்கள், அடைமான – மீளப் பெற்ற கடன்கள் அவ்வாறே உறுதியளிக்கப்பட்ட கடன்கள் போன்ற வசதிகள் இதனுள் உள்ளடங்குகின்றன.

மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆனது இலங்கையின் வியாபார கூட்டமைப்பில் மிகவும் நம்பிக்கை வாய்ந்ததும் நம்பகரமானதுமான கம்பனிகளில் வலுவானதும் நிலையானதுமான ஓர் கம்பனியாக இருப்பதன் முலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. கம்பனியானது மொத்த மூலதனமானது ரூபா.8.7 பில்லியனை விஞ்சியுள்ளதுடன் அதன் சொத்துக்களின் பெறுமதியானது ரூபா.41 பில்லியனாகும்

கம்பனியின் நிதிசார் செயலாற்றுகையானது கடந்த ஆண்டுகளில் நிலையானதாகவும் நீடித்து நிலைத்திருத்மையினாலும் மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸினால் இத்தகைய உறுதியான மூலதனக் கட்டமைப்பினைக் கொண்டிருக்க முடிந்துள்ளதுடன் வியாபாரத்தின் அனைத்து அம்சங்களிலும் நிதிசார் ரீதியாக உறுதியான நிறுவனம் என்ற நிலையினைத் தக்க வைத்துள்ளது. மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸ் ஆனது மிகச் சிறந்த வியாபார நடைமுறைகள் மற்றும் சிறந்த கோட்பாடுகள் என்பவற்றினை பல்லாண்டு காலமாக உறுதியாக பேணி வந்துள்ளமையால் கிடைக்கப் பெற்ற உறுதியான அடிப்படைகள் மற்றும் நிலையான தன்மை என்பனவற்றின் காரணமாகவே கம்பனியின் அனைத்து வெற்றிகளும் அடையப் பெற்றுள்ளன.

மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸின் வெற்றிக்கான இன்னொரு காரணம் அதன் தீவிரமான அர்ப்பணிப்புமிக்க தொழிலாளர்களாவர். இவர்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். கம்பனியின் அர்ப்பணிப்பு மிக்க விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்கள், தனித்துவமான சேவையினை வழங்கும் பொருட்டு முற்று முழுதாக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாக வினைத்திறன் வாய்ந்த சேவைகளினை வழங்கி வருகின்றன.

மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸ் ஆனது தரமான நிதிச் சேவைகளுக்கு மேலதிகமாக காப்புறுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய செயலமர்வு சேவைகளினையும் வழங்கிவரும் இலங்கையிலுள்ள ஒரு சில நிதிச் சேவைக் கம்பனிகளில் ஒன்றாகும். கொஹுவலையில் அமைந்துள்ள வாகன சேவை நிலையமானது கலைத் தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களுடனான மிகத் திறமை வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் / இயந்திரவியலாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் வாகன சேவை பழுதுபார்த்தல்கள் உள்ளடங்கலான அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகின்றது.

நோக்கம்

மக்களின் எதிர்பார்ப்புகளினை விஞ்சும் வகையிலான அர்த்தமுள்ள கோட்பாடுகளினை உருவாக்குதல்.

எமது நோக்கு

நிலையான தேசமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்குடன் கூட்டுப் பொறுப்புணர்வுடன் கூடிய மேன்மைமிக்க நிதிசார் சேவை வழங்குனர் என்ற உயரிய இடத்தினை அடைதல்.

எமது செயற்பணி

எமது ஊழியர்கள் மற்றும் சமூகத்திற்கான உறுதியான எதிர்காலமொன்றினை உருவாக்கும் நோக்குடன் எமது வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் முதலீட்டாளரின் வருமானத்தினை உறுதி செய்யும் அதேவேளையில் எமது வியாபார பங்காளர்கள் நலச்செழுமை பெறும் வகையில் புத்தாக்கமிக்க நிதிசார் தீர்வுகளினைப் பெறும் வகையில் மூலவளங்களினை வினைத்திறனுடன் பயன்படுத்துதல்.

பிரதான கோட்பாடுகள்
  • எதிர்பார்ப்புக்களுக்கப்பால் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளினை நிறைவேற்றுதல்
  • எமது மக்களுக்கு நீடித்து நிலைத்திருக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துதல்
  • அனைத்து மட்டங்களிலும் உலக தரத்திலான வாடிக்கையாளர் செவையினை வழங்குதல்
  • எமது துணைக் கோட்பாடுகள் வியாபார நடவடிக்கைளுடன் இணங்கியிருப்பதனை உறுதி செய்தல்.
துணைக் கோட்பாடுகள்
  • உறுதியுரை: வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொண்டு அவற்றினை நிறைவேற்றுதல்.
  • கௌரவம்: நன்றியுடனும் மீள் உறுதியுடனும் ஊழியர்கிள்ன முயற்சிகளை அங்கீகரித்தலும் ஊக்குவித்தலும்
  • கூட்டிணைவு: குறித்தவொரு வேலை தொடர்பில் கூட்டாக ஒன்றிணைந்த குழு முயற்சிகள்
  • ஒருங்கிணைவு: சரியானது எது என்பது குறித்த சமசரமற்ற நிலைப்பாடு.
  • கவனம்: செலவுகள் மற்றும் வருமானங்களின் ஆதாரமாக இருப்பதன் மூலம் அனைத்து விடயங்களிலும் அக்கறைதாரர்களுக்கான கோட்பாட்டினை உருவாக்குதல்.
  • போட்டித்தன்மை: நியாயமாக ஆனால் போட்டியில் முழுமையாக இருத்தல்.
  • நல்லொழுக்கம்: சமூகப் பொறுப்புடன் இருத்தலும் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுக்கமானவை என உறுதி செய்தலும்.
  • நட்புணர்வு: நிதியியலில் “நட்பு ரீதியான நிபுணர்” என்பது நிதிசார் தீர்வுகள் மற்றும் உயர்தரமான சேவை என்பவற்றினூடாக மகிழ்ச்சியினை ஏற்படுத்துதல்.
தொடர்பு
SiteLock