மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (MI Finance) தனது 86வது கிளையை திறந்து வைத்ததன் மூலம் பெருமையுடன் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் மற்றும் வணிக ரீதியாக மிகவும் பரபரப்பாக செயற்படும் கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ளது. சிரேஷ்ட நிர்வாகத்தினர், கிளைத் தலைவர்கள். ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க விருந்தினர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சம்பிரதாயபூர்வமான திறப்பு விழா இடம்பெற்றது.
புதிய கிரிபத்கொடை கிளை கம்பஹா மாவட்டத்தில் MI Finance இன் தடத்தை வலுப்படுத்துகின்றது, இது அதிக வசதி, விரைவான சேவை வழங்கல் மற்றும் எங்களுடைய முழுமையான நிதி தீர்வுகளுக்கான மேம்பட்ட அணுகலை வழங்குகின்றது. அதன் மூலோபாய இருப்பிடத்துடன், இந்த கிளை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் முதல் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் நம்பகமான நிதி உதவியை நாடும் குடும்பங்கள் வரை பல்வேறு வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறப்பு விழா பாரம்பரிய மத ஆசீர்வாதங்களுடன் நிறைவடைந்தது, அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர் ஈடுபாடுகள் மற்றும் ஊழியர்களின் தொடர்புகள் புதிதாக நிறுவப்பட்ட கிளையின் வலுவான குழு மனப்பான்மை மற்றும் உற்சாகத்தை எடுத்துக்காட்டுகின்றன.
தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், எங்கள் 86வது கிளையின் தொடக்கம், வாடிக்கையாளர்களுக்கு நேர்மை மற்றும் சிறந்து விளங்கும் சேவையை வழங்குவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை, மீள்தன்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது.
கிரிபத்கொடை குழுவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் பிராந்தியத்தில் புதிய வளர்ச்சியையும் வாடிக்கையாளர் மதிப்பையும் அதிகரிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றோம்.



