
சமூக தாக்கத்திற்கான முயற்சி | SDG 3 உடன் இணக்கமானது: நல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கட்டமைப்பு மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) உறுதிமொழிகளுக்கு இணங்க, மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 2025 டிசம்பர் 11 ஆம் திகதி மஹரகமவில் உள்ள தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு (அபேக்க்ஷா மருத்துவமனை) படுக்கை விரிப்புகளை நன்கொடையாக வழங்கியது.
மருத்துவமனை ஊழியர்களுடனான பங்குதாரர்களின் ஈடுபாட்டின் அடிப்படையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகள் அடிக்கடி இரத்தம் மற்றும் அறுவை சிகிச்சை திரவங்களுக்கு ஆளாகின்றன என்பது அடையாளம் காணப்பட்டது. முறையாக சுத்தம் செய்யப்பட்டாலும் முழுமையான கறை நீக்கத்தினை எப்போதும் அடைய முடியாது, இது சுகாதாரத் தரங்களையும் நோயாளியின் வசதியையும் பாதிக்கலாம். இந்த செயல்பாட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தமான சுகாதார நிலைமைகளைப் பராமரிப்பதில் மருத்துவமனையை ஆதரிப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சியை தலைமை இயக்க அதிகாரி திரு.லக்சந்த குணவர்தன தலைமையிலான நிலையான ஆளுகைக் குழு அங்கீகரித்து மேற்பார்வையிட்டது, இது நிறுவனத்தின் நிலைத்தன்மை உத்தி மற்றும் நிர்வாக நடைமுறைகளுடனான இணக்கத்தை உறுதி செய்தது.
இந்த நன்கொடையானது அபேக்க்ஷா மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் பி.ஐ. குருகுலசூரியவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. இந்த விநியோகத்தை மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. மனோஜ் சிறிவர்தன (நிலையான நிதித் தலைவர்) திரு. தினேஷ் செனவிரத்ன (சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் - R1) மற்றும் திரு. தமித் மாதவா (கிளை முகாமையாளர்) ஆகியோர் எளிதாக்கினர்.
இந்த முயற்சி ESG இன் சமூகத் தூணுக்கு பங்களிக்கிறது மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 3 உடன் ஒத்துப்போகிறது - நோயாளி நலனை ஆதரிப்பதன் மூலமும் சுகாதாரத் தரங்களை வலுப்படுத்துவதன் மூலமும், ஒரு முக்கிய பொது சுகாதார நிறுவனத்தின் மீள்தன்மைக்கு பங்களிப்பதன் மூலமும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுகின்றது.
