முக்கிய உண்மைகள்
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பீஎல்சி (மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ்) இனால் வழங்கப்படும் ஏதேனும் நிதியிடல் உற்பத்தி அல்லது சேவைக்கான தங்களின் இணக்கப்பாட்டுக்கு முன்னதாக, தீர்மானத்தினை மேற்கொள்ளும் செயல்முறைக்கு உதவியளிக்கும் வகையில் எமது வாடிக்கையாளர்கள் முதன்மைத் தகவல்களினை வழங்கியுள்ளார்களா என்பதனை உறுதி செய்து கொள்வது எமது பொறுப்பு என்பதனை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸினால் வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான முதன்மைத் தகவல் கீழே தரப்பட்டுள்ளது. மேலதி விளக்கங்கள் ஏதேனும் தேவைப்படுமிடத்து, தங்களுக்கு அண்மையிலுள்ள மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் கிளையுடன் தொடர்பு கொண்டு சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் / கிளைக்குப் பொறுப்பான முகாமையாளரினைச் சந்திக்கவும்.
நடைமுறைகளினைக் கையாள்வது தொடர்பான முறைப்பாடுகள் - ஹொட் லைன்: 070-276 2083
- முறைப்பாடுகளினைக் கையாள்வதற்கென அர்ப்பணிப்புமிக்க உத்தியோகத்தர் ஒருவர் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் தலைமையலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்கள் எவையேனும் முறைப்பாடுகள் குறித்து முறையிடுவதாயின் 070 – 2762083 எனும் தொலைபேசி இலக்கதினை அழைப்பதனூடாக வாடிக்கையாளர்களின் முறையீடுகளினைக் கையாளும் உத்தியோகத்தருடன் தொடர்பு கொள்ளலாம். இந்த தொலைபேசி இலக்கமானது நாடு புராகவுமுள்ள அனைத்து மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் கிளைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- இதற்கும் மேலாக, மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸினால் இதுதொடர்பில் வழங்கப்பட்ட பதில் அல்லது தீர்வு குறித்து வாடிக்கையாளர் திருப்தி கொள்ளாவிடின் வழங்கப்பட்டுள்ள இலக்கங்களினூடாக நிதிசார் குறைகேள் அதிகாரியின் சேவையினையும் பெற்று்க கொள்ளலாம்.
நிதிக் குத்தகை (FL)
- இந்த குத்தகை வசதியானது ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான காலப்பகுதியொன்றுக்கு வழங்கப்படும். ஆகக்கூடுதலாக 60 மாதங்களாகும்.
- வாடகைத் தொகை மற்றும் வாடகைக் கொடுப்பனவு அட்டவணை என்பன விபரமாகக் குறிப்பிடப்படுவதுடன் முதலில் குத்தகை எடுப்பவரினால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும்.
- சொத்தானது வாகனமொன்றாக இருப்பின், வாகனத்தின் உரித்துடமையானது வாடிக்கையாளர் வசம் இருப்பதுடன் அதன் உண்மையான உரித்துடமையானது மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சியிடமே காணப்படும்.
- ஏற்புடைய சேவை வழங்கல் கட்டணமானது முதலில் குறித்துரைக்கப்படுவதுடன் அது குத்தகைதாரரினால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும். உரிய வரிகள் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பன குத்தகைதாரரினால் பொற்பேற்கப்படும்.
- வாகனம் / உபகரணத்தின் இயங்கு நிலையினைப் பேணுவது குத்தகைதாரரின் பொறுப்பாகும். விரிவானக் காப்புறுதிக் கட்டணமானது முழு வசதிக் காலப்பகுதிக்கும் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு நிதி ரீதியான நலன்களைப் வழங்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
- காலங் கடந்து நிலுவையாகவுள்ள கொடுப்பனவுகளுக்கான மாதாந்த வட்டி வீதம் 4% ஆகும். இது முகாமைத்துவத்தின் தற்துணிபிற்கிணங்க மாற்றமடையலாம். எவ்வாறாயினும், தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி குறித்து விளக்கமளிக்கப்படுகையில் அறிவிக்கப்படும்.
- வாடகைக் கொடுப்பனவுத் தொகை மற்றும் வாடகைக் கொடுப்பனவு அட்டவணை என்பன குறித்த விபரம் ஆரம்பத்திலேயே விளக்கமாகத் தெரிவிக்கப்படும்.
- • காலங் கடந்த நிலுவைத் தொகைக்கான வட்டி மாதமொன்றிற்கு 4% ,ல் அறிவீடு செய்யப்படும்.
- உரிய அரசாங்க வரிகள் (ஏதேனுமிருப்பின்), சேவை வழங்கல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிக் கட்டணத் தொகை என்பன முதலிலேயே விபரமாகத் தெரிவிக்கப்படும்.
- முதலில், மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரினால் வாடிக்கையாளருக்கு இந்த சேவை வழங்கலின் சிறப்பியல்புகள் மற்றும் குறித்த வசதியினை முன்னெடுப்பதற்கான கம்பனியின் தேவைப்பாடு என்பன தொடர்பில் விளக்கமளிக்கப்படும்.
- அச்சந்தர்ப்பத்தில், வசதிப்படுத்தல் தொடர்பான நியதிகள் குறித்து சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில்’ பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.
- அனைத்து நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் உடன்படிக்கைகளுக்கமைவாக, வாடிக்கையாளர் குறித்த கடன் வசதி தொடர்பான விண்ணப்பப் படிவத்தினை நிரப்புதல் வேண்டும்.
- சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரானவர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வாடிக்கையாளரின் தகைமையினை மதிப்பீடு செய்யும் பொருட்டு அது தொடர்பான ஆவணங்கள், வாடிக்கையாளர் தகவல் மற்றும் ஏனைய வியாபாரத் தகவல் (ஏதேனுமிருப்பின்) போன்றவற்றினை வாடிக்கையாளரிடமிருந்து கோருவார்.
- அதேவேளையில், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் வாடிக்கையாளரின் வீடு, வியாபாரத் தளம் என்பவற்றிற்கும் கடன் உத்தரவாதம் வழங்குபவரின் வீடு மற்றும் அவருடைய வியாபாரத் தளங்களுக்கும் விஜயம் செய்வார்.
- அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் கடன் மதிப்பீடொன்றிதை தயாரித்து அதனை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பார்.
- அங்கீகாரம் வழங்கும் செயற்பாட்டின் போது, கடன் பெறுபவரிடமிருந்து மேலதிகமான விபரங்கள் / ஆவணங்கள் கோரப்படலாம் என்பதுடன் கடன் பெறுபவரினால் அவை மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
- இந்தக் கடன் வசதியின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அங்கீகாரம் வழங்குபவர்களினால் திருத்தியமைக்கப்பட முடியும் என்பதுடன் அது தொடர்பில் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியினால் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
- இந்தக் கடன் வசதியானது கடன் தொடர்பான தீர்மானங்களினால் நிராகரிக்கப்படலாம் என்பதுடன் இது தொடர்பிலும் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். கடன் வசதிக்கான அங்கீகாரமானது கம்பனியின் கடன் கொள்கை மற்றும் ஏனைய கடன் மதிப்பாய்வு ஆவணங்கள் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்ற ஓர் சுயாதீன செயல்முறையாகும்.
- இந்தக் கடன் வசதியானது அங்கீகரிக்கப்டுமாயின், வாடிக்கையாளரானவர் அவரின் பிணை ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு வருமாறு அழைக்கப்படுவார். அந்த நேரத்தில் ஏற்புடைய கட்டணங்கள் இருக்குமிடத்து அவை செலுத்தப்படுதல் வேண்டும்.
- காப்புறுதிப் பூட்கை, அடைமானப் பாதுகாப்பு பூட்கை போன்றவை பூர்த்தி செய்யப்பட்டு மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- கடன் பெறுபவர் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸிடமிருந்து கொள்வனவுக் கட்டளையினைப் பெற்று வாகனம் / உபகரணங்களின் விற்பனையாளரிடம் கையளித்தல் வேண்டும்.
- விற்பனையாளர் வாகனம் / உபகரணத்தினைப் பதிவு செய்யும் நடைமுறையினைப் பூர்த்தி செய்து உண்மையான உரித்துடமையினை மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு வழங்குதல் வேண்டும். கொடுப்பனவினைச் சேகரிக்கும் பொருட்டு நகல் வாகனத் திறப்புடன் (ஏதேனுமிருப்பின்) மூலப் பதிவுச் சான்றிதழினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
நியதி
- கம்பனியினால் தீர்மானிக்கப்படும் நிலையான காலப்பகுதியொன்று
வாடகை
- வங்கியாளரின் கட்டளை, காசு அல்லது காசோலை மூலமான மாதாந்த தவணைக்கட்டணம். வாடகைக் கட்டணமானது கம்பனியினால் தீர்மானிக்கப்படுவதுடன் ஆரம்பத்திலேயே கம்பனி மற்றும் கடன் பெறுபவரினால் குறித்த கட்டணமானது ஏற்றுக் கொள்ளப்படும்.
உபகரணங்களின் பயன்பாடு
- குத்தகைக்கு வழங்கப்பட்ட உபகரணத்தின் பொருத்தமான பேணுகை.
- வழங்கப்பட்ட நோக்கத்திற்கான பயன்பாடு.
- நாளாந்த பாவனையின் போது ஏற்படும் ஏதேனும் மாறுதல்களுக்குட்பட்டு குத்தகையாளருக்கு வழங்கப்பட்டவாறு நிலையில் பேணப்படுதல் வேண்டும்.
உபகரணத்திற்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதம்:
- ஏதேனும் சேதம் ஏற்படின், குத்தகையாளர் மிகச்சிறந்த திருந்த வேலைகள், சிறந்த நிலை மற்றும் தொழிற்படு நிலை என்பவற்றினைக் கொண்டதாக குறித்த உபகரணத்தினை மாற்றியமைப்பதற்கான தெரிவினைக் கொண்டுள்ளார்.
- ஏதேனும் இழப்பு ஏற்படின், குத்தகையாளரின் சார்பில் குத்தகை வழங்குனரினால் பொறுப்பேற்கப்பட்ட அனைத்துச் செலவுகள், செலவினங்கள் மற்றும் கட்டணங்கள் உள்ளடங்கலான குறித்துரைக்கப்பட்ட இழப்புப் பெறுமதியினை குத்தகையாளர் செலுத்துதல் வேண்டும்.
காப்புறுதி
- காப்புறுதி வழங்குனர் மற்றும் காப்புறுதியாளரினால் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட காப்புறுதி வழங்குனர் / வழங்குனர்களுடன் காப்புறுதி செய்யப்பட்ட உபகரணத்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிச் செலவுமற்றும் அதனுடன்தொடர்புடைய ஏனைய அனைத்துக் கட்டணங்களும் காப்புறுதியாளரினால் பொறுப்பேற்கப்பட்டு உரிய திகதிகளி்ல கொடுப்பனவு மேற்கொள்ளப்படுதலும் வேண்டும்.
வாடகைக் கொள்வனவு (HP)
- இத்தகைய சேவை வழங்கலின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். எவ்வாறாயினும், இந்த விதியானது இந்த சேவை வழங்கலின் கீழ் புத்தம் புதிய உபகரணமாகக் கருதப்படுகின்ற உபகரணம் / இயந்திரத்திற்கு ஏற்புடையதாகாது.
- இந்தச் சேவையானது முதலில் உடன்பட்ட நிலையான காலப்பகுதியொன்றுக்கு வழங்கப்படும்.
- வாடகைத் தொகை மற்றும் வாடகைக் கொடுப்பனவு அட்டவணையானது என்பன விபரமாகக் குறிப்பிடப்படுவதுடன் முதலில் கடன் பெறுபவரினால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும்.
- சொத்தானது வாகனமொன்றாக இருப்பின், வாகனத்தின் உரித்துடமையானது வாடிக்கையாளர் வசம் இருப்பதுடன் அதன் உண்மையான உரித்துடமையானது மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சியிடமே காணப்படும்.
- ஏற்புடைய சேவை வழங்கல் கட்டணமானது முதலில் குறித்துரைக்கப்படுவதுடன் அது குத்தகைதாரரினால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும். உரிய வரிகள் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பன கடன் பெறுபவரினால் பொற்பேற்கப்படும்.
- வாகனம் / உபகரணத்தின் இயங்கு நிலையினைப் பேணுவது கடன் பெறுபவரின் பொறுப்பாகும். விரிவானக் காப்புறுதிக் கட்டணமானது முழு வசதிக் காலப்பகுதிக்கும் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு நிதி ரீதியான நலன்களைப் வழங்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
- காலங் கடந்து நிலுவையாகவுள்ள கொடுப்பனவுகளுக்கான மாதாந்த வட்டி வீதம் 4% ஆகும். இந் வீதமானது முகாமைத்துவத்தின் தற்துணிபிற்கிணங்க மாற்றமடையலாம். எவ்வாறாயினும், தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு, இந்த வசதி குறித்து விளக்கமளிக்கப்படுகையிலேயே அறிவிக்கப்படும்.
- • வாடகைக் கொடுப்பனவுத் தொகை மற்றும் வாடகைக் கொடுப்பனவு அட்டவணை என்பன குறித்த விபரம் ஆரம்பத்திலேயே விளக்கமாகத் தெரிவிக்கப்படும்.
- • காலங் கடந்த நிலுவைத் தொகைக்கான வட்டி மாதமொன்றிற்கு 4% ,ல் அறிவீடு செய்யப்படும்.
- உரிய அரசாங்க வரிகள் (ஏதேனுமிருப்பின்), சேவை வழங்கல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிக் கட்டணத் தொகை என்பன முதலிலேயே விபரமாகத் தெரிவிக்கப்படும்.
- முதலில், மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரினால் வாடிக்கையாளருக்கு இந்த சேவை வழங்கலின் சிறப்பியல்புகள் மற்றும் குறித்த வசதியினை முன்னெடுப்பதற்கான கம்பனியின் தேவைப்பாடு என்பன தொடர்பில் விளக்கமளிக்கப்படும்.
- அச்சந்தர்ப்பத்தில், வசதிப்படுத்தல் தொடர்பான நியதிகள் குறித்து சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.
- வாடிக்கையாளர் குறித்த கடன் வசதி தொடர்பான விண்ணப்பப் படிவத்தினை நிரப்புதல் வேண்டும்.
- சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரானவர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வாடிக்கையாளரின் தகைமையினை மதிப்பீடு செய்யும் பொருட்டு அது தொடர்பான ஆவணங்கள், வாடிக்கையாளர் தகவல் மற்றும் ஏனைய வியாபாரத் தகவல் (ஏதேனுமிருப்பின்) போன்றவற்றினை வாடிக்கையாளரிடமிருந்து கோருவார்.
- அதேவேளையில், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் வாடிக்கையாளரின் வீடு, வியாபாரத் தளம் என்பவற்றிற்கும் கடன் உத்தரவாதம் வழங்குபவரின் வீடு மற்றும் அவருடைய வியாபாரத் தளங்களுக்கும் விஜயம் செய்வார்.
- அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் கடன் மதிப்பீடொன்றிதை தயாரித்து அதனை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பார்.
- அங்கீகாரம் வழங்கும் செயற்பாட்டின் போது, கடன் பெறுபவரிடமிருந்து மேலதிகமான விபரங்கள் / ஆவணங்கள் கோரப்படலாம் என்பதுடன் கடன் பெறுபவரினால் அவை மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
- இந்தக் கடன் வசதியின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அங்கீகாரம் வழங்குபவர்களினால் திருத்தியமைக்கப்பட முடியும் என்பதுடன் அது தொடர்பில் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியினால் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
- இந்தக் கடன் வசதியானது கடன் தொடர்பான தீர்மானங்களினால் நிராகரிக்கப்படலாம் என்பதுடன் இது தொடர்பிலும் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். கடன் வசதிக்கான அங்கீகாரமானது கம்பனியின் கடன் கொள்கை மற்றும் ஏனைய கடன் மதிப்பாய்வு ஆவணங்கள் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்ற ஓர் சுயாதீன செயல்முறையாகும். கம்பனியோ அல்லது அதன் உத்தியோகத்தர்களோ கடன் முன்மொழிவுகள் குறித்த ஏதேனும் நிராகரித்தலுக்குப் பொறுப்பாக மாட்டார்கள்.
- இந்தக் கடன் வசதியானது அங்கீகரிக்கப்படுமாயின், வாடிக்கையாளரானவர் அவரின் பிணை ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு வருமாறு அழைக்கப்படுவார். அந்த நேரத்தில் ஏற்புடைய கட்டணங்கள் இருக்குமிடத்து அவை செலுத்தப்படுதல் வேண்டும். காப்புறுதிப் பூட்கை, அடைமானப் பாதுகாப்பு பூட்கை போன்றவை பூர்த்தி செய்யப்பட்டு மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- கடன் பெறுபவர் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸிடமிருந்து கொள்வனவுக் கட்டளையினைப் பெற்று வாகனம் / உபகரணங்களின் விற்பனையாளரிடம் கையளித்தல் வேண்டும்.
- விற்பனையாளர் வாகனம் / உபகரணத்தினைப் பதிவு செய்யும் நடைமுறையினைப் பூர்த்தி செய்து உண்மையான உரித்துடமையினை மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு வழங்குதல் வேண்டும். கொடுப்பனவினைச் சேகரிக்கும் பொருட்டு நகல் வாகனத் திறப்புடன் (ஏதேனுமிருப்பின்) மூலப் பதிவுச் சான்றிதழினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
நியதி
- கம்பனியினால் தீர்மானிக்கப்படும் நிலையான காலப்பகுதியொன்று.
வாடகை
- கம்பனியினால் தீர்மானிக்கப்படும் மாதாந்த வாடகை
உபகரணங்களின் பயன்பாடு
- வாடகைக்கு எடுப்பவரின் செலவில் சிறந்த முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இயங்கு நிலையில் வாகனத்தினைப் பேணுதல்.
உபகரணத்திற்கு ஏற்படும் இழப்பு மற்றும் நட்டம்
- வாகனத்திற்கு ஏற்படும் ஏதேனும் சேதம் அல்லது இழப்பு அல்லது அழிவுக்கெதிராக உரிமையாளர்கள் நட்டஈட்டினைக் கோருதல். வாகனம் தொடர்பான ஏதேனும் விபத்து அல்லது வேறு ஏதேனும் சம்பவம் குறித்து எழுத்து மூலம் உடனடியாக அறிவித்தல் வேண்டும்.
காப்புறுதி
- அதன் முழுமையான சந்தைப் பெறுமதி வரையில் காப்புறுதி செய்யப்பட்ட வாகனத்தினை வைத்திருத்தல்.
கடன்கள்
- இத்தகைய சேவை வழங்கலின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். எவ்வாறாயினும், இந்த விதியானது இந்த சேவை வழங்கலின் கீழ் புத்தம் புதிய உபகரணமாகக் கருதப்படுகின்ற உபகரணம் / இயந்திரத்திற்கு ஏற்புடையதாகாது.
- இந்தச் சேவையானது முதலில் உடன்பட்ட நிலையான காலப்பகுதியொன்றுக்கு வழங்கப்படும். ஆகக்கூடுதலான காலப்பகுதி 60 மாதங்களாகும்.
- வாடகைத் தொகை மற்றும் வாடகைக் கொடுப்பனவு அட்டவணையானது என்பன விபரமாகக் குறிப்பிடப்படுவதுடன் முதலில் கடன் பெறுபவரினால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும்.
- சொத்தானது வாகனமொன்றாக இருப்பின், வாகனத்தின் உரித்துடமையானது வாடிக்கையாளர் வசம் இருப்பதுடன் அதன் உண்மையான உரித்துடமையானது மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சியிடமே காணப்படும்.
- ஏற்புடைய சேவை வழங்கல் கட்டணமானது முதலில் குறித்துரைக்கப்படுவதுடன் அது குத்தகைதாரரினால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும். உரிய வரிகள் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பன கடன் பெறுபவரினால் பொற்பேற்கப்படுதல் வேண்டும்.
- வாகனம் / உபகரணத்தின் இயங்கு நிலையினைப் பேணுவது கடன் பெறுபவரின் பொறுப்பாகும். விரிவானக் காப்புறுதிப் பூட்கையானது முழு வசதிக் காலப்பகுதிக்கும், மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு நிதி ரீதியான நலன்களைப் வழங்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
- காலங் கடந்து நிலுவையாகவுள்ள கொடுப்பனவுகளுக்கான மாதாந்த வட்டி வீதம் 4% ஆகும். இந்த வீதமானது முகாமைத்துவத்தின் தற்துணிபிற்கிணங்க மாற்றமடையலாம். எவ்வாறாயினும், தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி குறித்து விளக்கமளிக்கப்படுகையிலேயே அறியத் தரப்படும்.
- • வாடகைத் தொகை மற்றும் வாடகைக் கொடுப்பனவு என்பன குறித்த விபரம் ஆரம்பத்திலேயே விளக்கமாகத் தெரிவிக்கப்படும்.
- • காலங் கடந்த நிலுவைத் தொகைக்கான வட்டி மாதமொன்றிற்கு 4% ,ல் அறிவீடு செய்யப்படும்.
- உரிய அரசாங்க வரிகள் (ஏதேனுமிருப்பின்), சேவை வழங்கல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிக் கட்டணத் தொகை என்பன முதலிலேயே விபரமாகத் தெரிவிக்கப்படும்.
- முதலில், வாடிக்கையாளர் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரினைச் சந்தித்தல் வேண்டும். அவரினால் வாடிக்கையாளருக்கு இந்த சேவை வழங்கலின் சிறப்பியல்புகள் மற்றும் குறித்த வசதியினை முன்னெடுப்பதற்கான கம்பனியின் தேவைப்பாடு என்பன தொடர்பில் விளக்கமளிக்கப்படும்.
- அச்சந்தர்ப்பத்தில், வசதிப்படுத்தல் தொடர்பான நியதிகள் குறித்து சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.
- வாடிக்கையாளர் குறித்த கடன் வசதி தொடர்பான விண்ணப்பப் படிவத்தினை நிரப்புதல் வேண்டும்.
- சந்தைப்படுத்தல் உத்தியோகத்தரானவர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வாடிக்கையாளரின் தகைமையினை மதிப்பீடு செய்யும் பொருட்டு அது தொடர்பான ஆவணங்கள், வாடிக்கையாளர் தகவல் மற்றும் ஏனைய வியாபாரத் தகவல் (ஏதேனுமிருப்பின்) போன்றவற்றினை வாடிக்கையாளரிடமிருந்து கோருவார்.
- அதேவேளையில், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் வாடிக்கையாளரின் வீடு, வியாபாரத் தளம் என்பவற்றிற்கும் கடன் உத்தரவாதம் வழங்குபவரின் வீடு மற்றும் அவருடைய வியாபாரத் தளங்களுக்கும் விஜயம் செய்வார்.
- அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் கடன் மதிப்பீடொன்றிதை தயாரித்து அதனை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பார்.
- அங்கீகாரம் வழங்கும் செயற்பாட்டின் போது, கடன் பெறுபவரிடமிருந்து மேலதிகமான விபரங்கள் / ஆவணங்கள் கோரப்படலாம் என்பதுடன் கடன் பெறுபவரினால் அவை மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு வழங்கப்படுதலும் வேண்டும்.
- இந்தக் கடன் வசதியின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அங்கீகாரம் வழங்குபவர்களினால் திருத்தியமைக்கப்பட முடியும் என்பதுடன் அது தொடர்பில் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியினால் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
- இந்தக் கடன் வசதியானது கடன் தொடர்பான தீர்மானங்களினால் நிராகரிக்கப்படலாம் என்பதுடன் இது தொடர்பிலும் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். கடன் வசதிக்கான அங்கீகாரமானது கம்பனியின் கடன் கொள்கை மற்றும் ஏனைய கடன் மதிப்பாய்வு ஆவணங்கள் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்ற ஓர் சுயாதீன செயல்முறையாகும். கம்பனியோ அல்லது அதன் உத்தியோகத்தர்களோ கடன் முன்மொழிவுகள் குறித்த ஏதேனும் நிராகரித்தலுக்குப் பொறுப்பாக மாட்டார்கள்.
- இந்தக் கடன் வசதியானது அங்கீகரிக்கப்படுமாயின், வாடிக்கையாளரானவர் அவரின் பிணை ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு வருமாறு அழைக்கப்படுவார். அந்த நேரத்தில் ஏற்புடைய கட்டணங்கள் இருக்குமிடத்து அவை செலுத்தப்படுதல் வேண்டும். காப்புறுதிப் பூட்கை, அடைமானப் பாதுகாப்பு பூட்கை போன்றவை பூர்த்தி செய்யப்பட்டு மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- கடன் பெறுபவர் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸிடமிருந்து கொள்வனவுக் கட்டளையினைப் பெற்று வாகனம் / உபகரணங்களின் விற்பனையாளரிடம் கையளித்தல் வேண்டும்.
- விற்பனையாளர் வாகனம் / உபகரணத்தினைப் பதிவு செய்யும் நடைமுறையினைப் பூர்த்தி செய்து உண்மையான உரித்துடமையினை மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு வழங்குதல் வேண்டும். கொடுப்பனவினைச் சேகரிக்கும் பொருட்டு நகல் வாகனத் திறப்புடன் (ஏதேனுமிருப்பின்) மூலப் பதிவுச் சான்றிதழினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
- சேவை வழங்கலின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்வனவு எதுவுமில்லையெனில், கொடுப்பனவுக் கட்டளையானது பிணை ஆவணங்களில் கையொப்பமிடுவதன் மூலம் கடன் பெறுபவருக்கு வழங்கப்படும்.
நியதி
- கம்பனியினால் தீர்மானிக்கப்பட்ட நிலையான நியதியானது கம்பனி மற்றும் கடன் பெறுபவரினால் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மீள்கொடுப்பனவு
- வருடமென்றிற்கு கம்பனியினால் தீர்மானிக்கப்பட்ட வீதத்தில் வட்டியுடன் கடன் மற்றும் முற்பணத் தொகையினைச் செலுத்துதல், அல்லது கம்பனியினால் காலத்திற்குக் காலம் நிர்ணயிக்கப்படுகின்ற அல்லது மாற்றப்படுகின்ற அத்தகைய ஏனை வரி வீதம் அல்லது வீதங்கள் அல்லது கம்பனியின் தலைவரின் முற்றுமுழுதான தற்துணிபின் அடிப்படையில் விடுக்கப்படுகின்ற பணிப்புரை மற்றும் காலத்திற்குக் காலம் விதிக்கப்படக்கூடிய ஏதேனும் அரசாங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள்.
பதிவு செய்தல்
- இந்த வசதியின் கீழ் பிணையாக ஏதேனும் வாகனம் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்தல் வேண்டும் என்பதுடன் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு முழுமையான உரித்துடமை அளிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மோட்டார் வாகனப் பதிவாளரிடம் முறையாகப் பதிவு செய்யப்படுதலும் வேண்டும்.
காப்புறுதி
- கம்பனியினால் அங்கீகரிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட காப்புறுதியாளர்களுடன் காப்புறுதி செய்வதற்குப் பிணையாக வழங்கப்பட்ட வாகனம் / வாகனங்களுக்கு ஏற்படும் செலவினை கடன் பெறுபவரே பொறுப்பேற்றல் வேண்டும் என்பதுடன் அத்தகைய காப்புறுதியினை இந்த வசதியானது தொடர்ச்சியாக வழங்கப்படும் வரையில் எப்போதும் செல்லுபடியான நிலையில் வைத்திருத்தல் வேண்டும். கடன்பெறுபவர் உரிய திகதிக்கு முன்பாக காப்புறுதிப் பூட்கையினை புதுப்பிக்காத சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் ஏற்படும் அனைத்துச் செலவுகளும் கடன் பெறுபவரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிணை நிபந்தனை
- பிணையாக வழங்கப்படும் வாகனம் / வாகனங்களின் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் என்பன கடன் பெறுபவரின் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிணையாக வழங்கப்பட்ட வாகனம் / வாகனங்கள் சாதாரண வேலை நேரங்களில் ஏதேனும் வாராந்த நாளில் கம்பனியினால் அல்லது கம்பனியின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் பரிசோதனைக்குட்படுத்துதற்கான அனுமதி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
இறப்பு, நிதி ரீதியான முடக்கம் அல்லது முறிவடைதல்:
- கம்பனி முறிவடைதல் அல்லது கடன் பெற்றவர் மரணமடைதல் அல்லது சட்டத்தினால் மட்டுப்படுத்தப்படாத அல்லது விலக்களிக்கப்படாத வேறு ஏதேனும் பொறுப்பு மட்டுப்படுத்தப்படவோ அல்லது விலக்களிக்கப்படவோ மாட்டாது.
தீர்ப்பனவும் சட்ட ரீதியான உரிமையும்
- மேற்குறித்தவற்றினைக் கவனத்தில் கொள்ளாது, கம்பனியானது வாகனமொன்றினைப் பெற்றவரிடமிருந்து வர வேண்டியுள்ள கொடுப்பனவுகளினை அறவீடு செய்வதற்கு வாகனத்தினைப் பெற்றவரின் ஏதேனும் உரிமைச் சுதந்திரத்திற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குரிய உரிமையினை கம்பனி கொண்டுள்ளது.
இரகசியம் பேணுதல்:
- மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் நிறுவனமானது பொதுவான சட்டத்தின் கீழ் ஏதேனும் வாடிக்கையாளர் தொடர்பான விபரங்களினை இரகசியமாகப் பேணி வருகின்றதுடன் அவ்வாறான கடப்பாட்டினையே அதன் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் பேணி வருகின்றது. எவ்வாறாயினும், கம்பனியானது நீதிமன்ற சட்டமொன்றினால் அவ்வாறு தேவைப்படுத்தப்படும் போது வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள், கணக்குகள் அல்லது வைப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தலாம். அல்லது வாடிக்கையாளரினால் அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்டுள்ள போது அல்லது அதன் கடமைகளின் செயலாற்றுகையி்ன போது அல்லது சட்டத்தி்ன ஏதேனும் ஏற்பாடுகளுடன் இணங்கும் பொருட்டு அத்தகைய விபரங்களை வெளிப்படுத்தலாம்.
மூன்றாம் தரப்புக்கு வாடிக்கையாளர் தகவலினை வெளிப்படுத்துதல்:
வாடிக்கையாளர் தனது கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கணக்குகள் தொடர்பான ஏதேனும் தகவலினை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு மெர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸுக்கு இத்தால் அதிகாரமளிக்கின்றார்:
- வாடிக்கையாளருக்கு கம்பனியினால் அளிக்கப்படும் ஏதேனும் வசதி அல்லது சேவை தொடர்பில் கம்பனிக்கு வாடிக்கையாளர் அல்லது அவரின் கணக்குகளுக்கான உத்தரவாதமளிக்கும் எவரேனும் உத்தரவாதம் அளிப்பவர் அல்லது மூன்னறாம் தரப்பு சேவை வழங்குனர்; அல்லது
- வாடிக்கையாளருடன் தொடர்புடைய கம்பனியின் ஏதேனும் உரிமைகள் அல்லது கடப்பாடுகளுடன் தொடர்புடைய எவரேனும் உண்மையான அல்லது உள்ளார்ந்த பொறுப்பு வழங்கப்பட்டவர், பங்குபற்றாளர் அல்லது ஒப்பந்த தரப்பு.
வாடிக்கையாளர் என்ற வகையில் முரண்பாடு குறித்து நிதிக் கம்பனியின் எழுத்து மூல அறிவித்தல் வழங்கப்படும் வரையில் கணக்கு திறத்தல் படிவத்தில் (இதனகத்துப் பின்னர் “ஆணை: எனக் குறித்துரைக்கப்படும்) வழங்கப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களுக்கமைவாக கைச்சாத்திட்ட அறிவுறுத்தல்கள் அல்லது வரையப் பெற்ற அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணம் தொடர்பில் தொழிற்படுவதற்கு கம்பனி அதிகாரமளிக்கப்படுதல் வேண்டுமென இத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
- காசு, காசோலை, நேரடியான வங்கி வைப்புக்கள், சிட்டைக் கொடு்ப்பனவுகள் மற்றும் நிலையியல் கட்டளை என்பனவற்றின் மூலம் கொடுப்பனவுகள் மற்றும் வேறு ஏதேனும் அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுமிடத்து குறித்த கணக்கில் செலவு வைக்கப்படும்.
- கணக்கினை மூடுவதற்கான அத்தகைய கணக்கு அறிவுறுத்தல் தொடர்பான வேறு ஏதேனும் அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்ளுதல்.
வைப்புக்கள் மற்றும் மீள்பெறுவனவுகள் என்பன தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கமைவாக மேற்கொள்ளப்படுகின்றன. நிதிக் கம்பனியானது, நிதிக் கம்பனிக்கு திருப்திகரமான வகையில் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதனூடாக எமது தலைமை அலுவலகம் மற்றும் கிளை வலையமைப்புக்களில் பணத்தினை மீளப் பெறுவதற்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளது.
- ஏற்றுக் கொள்ளப்பட்டாலன்றி, நிதிக் கம்பனியினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய இடைவேளைகளில் வாடிக்கையாளரின் கணக்கு மீதான காலப்பகுதிக்குரிய கூற்றினை வழங்கும். வாடிக்கையாளர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட காலப்பகுதிக்குரிய மீதிக் கூற்று தொடர்பில் தவறுகள் அல்லது முழுமையின்மை தொடர்பில் வாடிக்கையாளருக்கு ஏதேனும் ஆட்சேபைனை இருப்பின் அதனை உடனடியாகவே குறிப்பிடுதல் வேண்டும். அத்தகைய கூற்றினை பெற்றுக் கொண்டதும் உடனடியாகவே எழுத்து மூலம் நிதிக் கம்பனியினால் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஆட்சேபனை மேலே குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் தெரிவிக்கப்படாவிடின், குறித்த காலப்பகுதிக்குரிய கூற்றானது சரியானதெனக் கருதப்பட்டு அறிக்கை வடிவில் தயாரிக்கப்படும்.
- வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கு இணைந்த கணக்காக இருக்கும் சந்தர்ப்பத்தில், இணைந்த கணக்கினை வைத்திருப்பவர்கள் அத்தகைய கணக்கினூடாக ஏதேனும் கொடுக்கல் வாங்கலினை இணைந்து கூட்டாக மேற்கொள்ளலாம்.
- இணைந்த கணக்கினை வைத்திருப்பவர்களில் ஒருவர் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இறக்கும் சந்தர்ப்பத்தில், நிதிக் கம்பனியானது அதில் வைப்பிலிடப்பட்டுள்ள முழுப் பணத்தையும் அனைத்து ஆவணங்களையும் எஞ்சியுள்ளவர்களிடம் வழங்குதல் வேண்டும் அல்லது இறந்து போன இணைந்த கணக்கினை வைத்திருந்தவரின் சட்ட ரீதியான பின்னுரித்தாளர் அல்லது பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கா விடின் இணைந்த கணக்கினை வைத்திருப்பவர்களின் ஏதேனும் கணக்கில் செலவு வைக்கப்படும்.
- இணைந்த கணக்கினை வைத்திருக்கும் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு பற்றிய அறிவித்தலினைப் பெற்றுக் கொண்டதும் நிதிக் கம்பனியானது வைப்பிலுள்ள அனைத்துப் பணங்கள் மற்றும் ஆவணங்களினைக் கையளிப்பதற்கோ அல்லது அதன் கடப்பாடுகளினை முழுமையாக நிறைவேற்றுதல் வேண்டும்.
- நிதிக் கம்பனியானது ஒன்றோ அல்லது ஒன்றிகு மேற்பட்டஇணைந்த கணக்கினை வைத்திருப்பவர்களின் இறப்பு குறித்த அறிவித்தலினைப் பெற்றுக் கொண்டதும் வைப்பிலிடப்பட்டுள்ள அனைத்துப் பணங்கள் மற்றும் ஆவணங்கள் அல்லது நிதிக் கம்பனியினால் வைத்திருக்கப்படும் ஏதேனும் கணக்கு தொடர்பான அதன் கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுதல் வேண்டும்.
- பங்குடமை கணக்கு வைத்திருப்பவர்கள் நிதிக் கம்பனியினால் அளிக்கப்படும் அனுமதிக்கப்பட்ட வசதிகளினைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்முறைப்படுத்தப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கலுக்குமானபொறுப்பினை இணைந்த வகையில் ஏற்கின்றனர்.
- சேமிப்புக் கணக்கானது தனிப்பட்டவர்களினால் தனியாகவோ அல்லது கூட்டாக இணைந்தோ திறக்கப்பட முடியும்.
- தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு, வாகன சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டையினைச் சமர்ப்பிப்பதன் மூலம் திறக்கப்பட முடியும்.
- 18 வயதிற்குக் குறைந்தவர்களுக்கான சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றினைத் திறப்பதாயின் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- சேமிப்புக் கணக்கொன்றினைத் திறப்பதற்கு ஆகக்குறைந்தது ரூபா.500/- இனை வைப்பிலிடுதல் வேண்டும்.
- கம்பனியினால் விதித்துரைக்கப்பட்ட ஆகக்குறைந்த தொகையான ரூபா.500/- இனை விடக் கணக்கு மீதி குறைவாக காணப்படுமாயின் வட்டியானது செலவு வைக்கப்பட மாட்டாது.
- தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தினைச் சமர்ப்பிப்பதன் மூலம் பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ளலாம். சேமிப்புப் புத்தகத்துடன் மீளப் பெறும் படிவத்தினை முறையாகப் பூரணப்படுத்தி சமர்ப்பித்தல் வேண்டும். இணைந்த சேமிப்புக் கணக்கில் மீளப் பெறுதல் குறித்து ஏதேனும் விசேடமாக குறிப்பிடப்படின் கணக்கு திறக்கும் போதே வழங்குதல் வேண்டும், (ஒரு தரப்பினது அல்லது இரண்டு தரப்பினதும் கைய்யொப்பம்)
- அஞ்சல் முகவரி மாற்றம் குறித்து உடனடியாகவே எழுத்து மூலம் கம்பனிக்கு அறிவித்தல் வேண்டும்
- கணக்குப் புத்தகம் தொலைந்து போனாலும் உடனடியாக கம்பனிக்கு அறிவித்தல் வேண்டும்
- காசோலைகள் / வரைபுகள்/ மற்றும் காசுக் கட்டளைகள் என்பன நிதிக் கம்பனியின் ஏக முடிவின்படி சேமிப்புக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்படலாம்
- வட்டியானது நாளாந்த மீதிக்கு கணக்கிடப்பட்டு குறித்த கணக்கில் ஒவ்வொரு கணிப்பீட்டின் போதும் தேவையான ஆகக் குறைந்த மீதி இருக்குமாயின் மாதாந்தம் கணக்கில் சேர்க்கப்படும்.
- ஏதேனும் வைப்பு அல்லது மீளப் பெறுதல் மேற்கொள்ளப்படும் போது கரும பீடத்தில் கணக்குப் புத்தகம் சமர்ப்பிக்கப்படின் நிதிக்கம்பனியினால் குறித்த கணக்குப் புத்தக்கத்தில் குறித்த நடவடிக்கையானது பதிவேற்றப்படும். கணக்கு வைத்திருப்பவர் நிதிக் கம்பனியினை விட்டுச் செல்ல முன்னர் பதிவுகள் சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்பதனை அறிந்து கொள்வதற்காக அவரின் கணக்குப் புத்தக்கதினை கவனமாக பரிசீலித்துப் பார்த்தல் வேண்டும். ஏதேனும் முரண்பாடு காணப்படுமிடத்து அது குறித்து நிதிக் கம்பனிக்கு உடனடியாகவே அறிவித்தல் வேண்டும்.
- ஐந்து வருடங்களுக்கு மேல் கொடுக்கல் வாங்கல் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்காத கணக்கு தொழிற்பாடற்ற கணக்கு என வகைப்படுத்தப்படும்.
Deposits
- வைப்புக்கள் 2005 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நிதிக் கம்பனி (வைப்புக்கள்) பணிப்புரைக்கமைவாக பெற்றுக் கொள்ளப்படும்.
- வைப்புக்கள் தனியொருவரின் பெயரில் அல்லது, அவ்வாறில்லையெனில் தேவைப்படின் ஒன்றிக் மேற்பட்டவர்களின் பெயர்களில் மேற்கொள்ளப்படலாம் என்பதுடன் கொடுப்பனவுகள் தனிப்பட்ட ஒருவருக்கோ, கூட்டாகவோ அல்லது பலருக்கோ அல்லது பின்னுரித்தாளருக்கோ அல்லது விண்ணப்பத்தில் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கோ மேற்கொள்ளப்படலாம்.
- இணைந்த வைப்புக் கணக்கில் வெறு எவரினதும் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பின் முதிர்வின் போது வைப்பாளர்களில் யாரேனும் ஒருவர் உயிருடன் இருந்தாலும் அத்தகைய பெயர் குறிப்பிடலானது சட்ட ரீதியாக செல்லுபடியற்றதாகும்.
- முகவரி , பெறுபவர் குறித்த ஏதேனும் மாற்றங்கள் அல்லது நிலையான வைப்புச் சான்றிதழ் தொலைந்து போதல் என்பன குறித்து உடனடியாக கம்பனிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.
- தவணை வைப்பினை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆகக்குறைந்த தொகை ரூபா.5000/- ஆகும்.
- தகைமை வாய்ந்த வைப்புப் பொறுப்புக்கள் வைப்பாளர் ஒருவருக்கு ஆகக்கூடுதலாக ரூபா.600,000/- வரையிலான இழப்பீட்டுக்காக நாணயச் சபையினால் அமுல்படுத்தப்படும் இலங்கை வைப்புக் காப்புறுதி திட்டத்தில் காப்புறுதி அளிக்கப்படுகின்றன.
வட்டியானது மாதாந்தம், காலாண்டு, வருடத்திற்கு இரண்டு தடவை அல்லது வருடாந்தம் அல்லது சேர்ந்த அடிப்படையில் செலுத்தப்படலாம் என்பதுடன் கணக்கு திறக்கப்படும் போது கம்பனிக்குத் தெரிவிக்கப்பட்டவாறு வைபாளர்களின் முன்னுரிமையின் அடிப்படையில் முதிர்வின் போது செலுத்தப்படலாம்.
- மீளப் பெறுகைகள் குறித்து வைப்பாளர்களினால் கம்பனிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படுதல் வேண்டும்.
- நிலையான காலப்பகுதிக்கென வைப்புச் செய்யப்பட்ட வைப்புக்கள் முதிர்வு்குக முன்னதாக மீளப்பெற்றுக் கொள்ளபட முடியாது ஆனால் மீள் பெறுகைகளுக்கான விசேட விண்ணப்பங்கள் தொடர்பில் முதிர்வுக்கு முன்னதாக மூன்று மாத கால முன்னறிவித்தல் கிடைக்கப் பெற்றிருப்பின் கவனத்தில் கொள்ளப்படும். எவ்வாறாயினும், கம்பனிக்குரித்தளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, குறித்த அறிவித்தலினை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ அதற்கு அதிகாரமுண்டு. முதிர்வுக்கு முன்னதாக மீளப்பெறப்படும் வைப்புக்கள் அல்லது அதன் ஒருபகுதி மீது தண்டப்பணம் அறவீடு செய்யப்படும். இத்தகைய சந்தர்ப்பத்தில், வைப்புச் செய்யப்பட்ட காலப்பகுதியின் அடிப்படையில் வட்டியில் சிறியளவு தொகை கழிப்பனவு செய்யப்படும் அதேவேளையில் மிகையாகச் செலுத்தப்பட்ட வட்டி கம்பனிக்கு மீளளிக்கப்படும். கம்பனியானது வைப்பிலுள்ள மூலதனத்திலிருந்து குறித்த மிகைத்தொகையினைக் கழிப்பனவு செய்வதற்கான உரிமையினைக் கொண்டுள்ளது. வைப்பாளர்கள் வைப்புத் தொகையினையும் வட்டியினையும் மீளப் பெற்றுக் கொள்வதற்கு சான்றிதழின் மறுபக்கத்தில் கையொப்பமிட்டு கம்பனியிடம் மிள்க கையளிக்குமாறு கேட்டு்க் கொள்ளப்படும்.
- வருடமொன்றுக்கு 4% கடன் வட்டியானது வைப்புக்கு ஏற்புடையதான மேற்படி வட்டி வீதத்தில் அறவிடப்படும்.
- மேற்குறித்த வைப்பின் பின்னரான வசதி தொடர்பான வட்டி வீதங்கள் மற்றும் சேவை வீதங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் கம்பனிக்குள்ளது.
- வைப்பாளர் இறக்குமிடத்து, நிலையான வைப்பு மீதான சம்பாத்தியங்கள் அவரின் சட்ட ரீதியான பின்னுரித்தாளர், பெயர் குறிப்பிடப்பட்டவர் அல்லது வாரிசு, நிறைவேற்றுனருக்கு வழங்கப்படும்.
- வைப்புச் சான்றிதழ் கைமாற்றத்தகாதது. எவ்வாறாயினும், வைப்பு விண்ணப்பத்தில் ஏதேனும் விசேடமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பின், முதிர்வின் போது வைப்பாளர் /கள் அல்லது அவர்களின் பிரதிநிதி, வாரிசு, நிறைவேற்றுனர் அல்லது பெயர் குறிப்பிடப்பட்டவர் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்துடையவர்களாவர்.
- வைப்பாளரினால் ஏதேனும் கோரிக்கை முன்வைக்கப்படின், கம்பனியினால் முதிர்வின் போது வைப்பாளர் / களினால் குறிப்பிடப்பட்ட கணக்கிற்கு வட்டி / வைப்புப் பணத்தினை அனுப்பி வைக்கப்படலாம். இத்தகைய சந்தர்ப்பத்தில், வைப்பாளர்’ / களினால் அறிவுறுத்தப்பட்டவாறான அத்தகைய அனுப்புதலினை மேற்கொண்டமையால் கம்பனிக்கெதிராக எழுகின்ற ஏதேனும் கோரிக்கைகள், நட்டங்கள், இழப்புக்கள் மற்றும் ஏதேனும் செலவினங்களை வைப்பாளர் / களே பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- காசோலை மூலமாக வைப்பு மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பத்தில், வைப்புச் சான்றிதழானது காசோலை தேறியதன் பின்னர் மட்டுமே வழங்கப்படும்.
- காசோலைகள் “மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி” எனும் பெயரில் எழுதப்படுதல் வேண்டும் என்பதுடன் அவை குறுக்குக் கோடிட்டு “பெறுவோன் கணக்கு மாத்திரம்” எனக் குறிப்பிடப்படுதலும் வேண்டும்.
- ஒவ்வொரு வைப்புத்தொகையின் அளவையும் கட்டுப்படுத்துங்கள்
- கம்பனியானது ஒவ்வொரு வைப்பினதும் தொகையினை நிர்ணயிப்பதற்கும் வைப்பொன்றுக்கான ஏதேனும் விண்ணப்பத்தினை ஏற்றுக் கொள்ள அல்லது நிராகரிப்பதற்கான அதிகாரத்தினைக கொண்டுள்ளது.
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படும் அல்லது செலுத்தத்தக்க வட்டி வீதங்களில் முன்னறிவித்தலுடன் அல்லதுமுன்னறிவித்தலின்றி அரசாங்கத்தினால் அல்லது மத்தியவங்கியின் நாணயச் சபையினால், அல்லது ஏதேனும் பிசுக்கால் கொள்கை அல்லது மீளாய்வினால் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்படின், பைபுக்களின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
- ஒரு மாதத்திற்குக் குறையாத அறிவித்தல் வழங்கிய பின்னர் வைப்பு மீளளிப்புச் செய்யப்படும்.
- காலத்திற்குக் காலம் அரசாங்கத்தினால் ஏதேனும் நியதிச்சட்ட கட்டணங்கள் விதிக்கப்படின், அவை அறவீடு செய்யப்படும்.
- வாடிக்கையாளர் தகவல்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமிடத்து அத்தகைய மாற்றங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் (முகவரி, வங்கி, தொழில் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டவர்) நிதிக் கம்பனிக்கு எழுத்து மூலம் வாடிக்கையாளரினால் வழங்கப்படுதல் வேண்டும்.
- நிதிக் கம்பனியானது அதற்குரித்தளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, வாடிக்கையாளருக்கு ஏதேனும் அறிவித்தல், கடிதம், பத்திரம் அல்லது ஆவணமொன்றினை சாதாரண தபால், நேரடியாக, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் (வாடிக்கையாளரினால் நிதிக் கம்பனிக்கு இறுதியாக வழங்கப்பட்டிருந்த முகவரி, தொலைநகல் இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு) மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்பதுடன் அத்தகைய தொடர்பாடலானது தபாலிடப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் (உள்நாடெனில்), தபாலிடப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் (வெளிநாடெனில்),தொடர்பாடல் மேற்கொண்ட அவ்வேளையிலேயே (தொநைகல் அல்லது மின்னஞ்சல்) அல்லது வழங்கிய வேளையிலேயே (நேரடியாக) வாடிக்கையாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்குமென கருத்திற் கொள்ளப்படும்.