"மேர்க்கன்டைல் பொடித்தோ சிறுவர் சேமிப்பு" திட்டம், குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கும், அவர்களின் உயர்கல்வி மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கு போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்கள், நெகிழ்வான வைப்புத் திட்டங்கள் மற்றும் சிறார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு மேலதிக சலுகைகளை வழங்குகிறது. அதே போல் அவர்களின் பாதுகாவலர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. 18 வயதுக்குட்பட்ட எவரும் சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம்.
தெரிவு செய்ய இரண்டு வகைகள் சேமிப்பு திட்டங்கள் காணப்படுகின்றன.
1. மேர்க்கன்டைல் பொடித்தோ பரிசுத் திட்டம் 3.5% (12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்)
(W.E.F. 2024 அக்டோபர் 01)
சேமிப்பின் மிகுதியின் அடிப்படையில் பல்வேறு வகையான பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கப்படும்.
| சேமிப்பு பெறுமதி (ரூ.) |
பரிசுப் பொருள் |
| 500 |
உண்டியல் |
| 2,500 |
LED writing tab |
| 5,000 |
சதுரங்க பலகை |
| 10,000 |
ஸ்டேஷனரி பேக் |
| 15,000 |
பாடசாலை பை |
| 25,000 |
3,000 பெறுமதியான DSI பரிசு வவுச்சர் |
| 50,000 |
சிறுவர்களுக்கான ஸ்கூட்டர் |
| 100,000 |
சொப்பர் சைக்கிள் |
| 200,000 |
கிட்டார் |
| 300,000 |
டேப்லெட் |
கணக்கு மிகுதி 300,000 ஐ அடையும் போது அனைத்து பரிசுகளும் உரித்துடையவை.
2. மேர்க்கன்டைல் பொடித்தோ அதிக வட்டி விகித திட்டம் 6%
(W.E.F. 2024 அக்டோபர் 01)
பரிசுப் பொருட்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவை.
மேலதிக நன்மைகள்
- இரண்டு திட்டங்களுக்கும் பெறுமதி மிக்க காப்பீட்டுத் தொகை வழங்கப்படும், இதில் கணக்கு வைத்திருப்பவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஆண்டுக்கு 21 நாட்கள் வரையில் ஒரு நாளைக்கு ரூ. 2,500 கொடுப்பனவும் பெற்றோர் இறந்தால், ரூ. 50,000 கொடுப்பனவும் வழங்கப்படும்.
- ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பண பரிசு வழங்கப்படும்.
ஆரம்ப வைப்பு
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கொண்ட பெற்றோர்/பாதுகாவலர் ரூ.500 ஆரம்ப வைப்புடன் “மேர்க்கன்டைல் பொடித்தோ” சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம்.
சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க தேவையான ஆவணங்கள்.
- பாதுகாவலரின் சிறுவர் சேமிப்பு ஆணை மற்றும் KYC.
- பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு /சாரதி அனுமதி பத்திரம்.
- சிறுவர்களின் பிறப்புச் சான்றிதழின் நகல் / தேசிய அடையாள அட்டையின் நகல்.
நீங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு கிளைக்கும் சென்று சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம்.