கேம் சேஞ்சர்ஸ் ஃபோரம் 1
MI Finance, தனது விற்பனை ஆரம்ப தொடரின் கீழ், அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறந்த பங்களிப்பாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, கேம் சேஞ்சர்ஸ் ஃபோரம் 1ஐ பெருமையுடன் அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு, ஏப்ரல் 9 ஆம் திகதி ஜைக் ஹில்ட்டனில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், வலையமைப்பு முழுவதிலும் இருந்து சிறப்பாகச் செயல்படும் குழு அங்கத்தவர்களை ஒன்றிணைத்தது.
இந்த ஆரம்ப கருத்தரங்கமானது, சிறப்பைக் கொண்டாடவும், சீரான செயல்திறனை அங்கீகரிக்கவும், நிறுவனத்திற்குள் உயர் சாதனைப் பண்பாட்டை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் தங்களின் அர்ப்பணிப்பு, முடிவுகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் பல்வேறு தயாரிப்புத் தொகுப்புகளில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.
இந்த அமர்வு, தலைமைத்துவக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான ஒரு மதிப்புமிக்க தளத்தையும் வழங்கியது. இதில் பங்கேற்பாளர்கள், எதிர்கால வணிகத் திசை, மூலோபாய முன்னுரிமைகள் மற்றும் தனிப்பட்ட, தொழில்முறை மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் குறித்த புரிதல்களைப் பெற்றனர். அரங்கில் ஊடாடும் தன்மையானது, குழுக்களிடையே அறிவுப் பகிர்வு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தது.
MI Finance நிறுவனத்திற்குள் செயல்திறன் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல், ஊழியர்களை ஊக்குவித்தல் மற்றும் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தொடர் முயற்சிகளின் தொடக்கமாக கேம் சேஞ்சர்ஸ் ஃபோரம் விளங்குகிறது.
MI Finance, சிறப்பை அங்கீகரிப்பதிலும், தொடர்ச்சியான வெற்றியை முன்னெடுத்துச் செல்ல தனது ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் உறுதியாக உள்ளது.