
2025 நவம்பர் 15 அன்று, மட்டக்குளியவில் உள்ள காக்கை தீவு கடற்கரையில், Clean Ocean Force லங்கா (COF) மற்றும் இலங்கை காவல்துறையுடன் இணைந்து, MI Finance கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்றிகரமான நடாத்தியது. கொழும்பின் மிகவும் மாசுபட்ட கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிக்கு, ஊழியர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பங்காளர் அமைப்புகளை ஒன்றிணைத்தது.
கடற்கரையை சுத்தம் செய்தல், MI Finance இன் நிலைத்தன்மை, பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் எங்கள் ESG கட்டமைப்பிற்குள் பொதிந்துள்ள கொள்கைகளுக்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்தது. SDG 14: தண்ணீருக்கு கீழே வாழ்க்கை, SDG 15: நிலத்தில் வாழ்க்கை, மற்றும் SDG 13: காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய UN SDG களுடன் இணைந்து, இந்த முயற்சி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பதற்கும் எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்தியது.
பல கிளைகள் மற்றும் துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், COF மற்றும் இலங்கை காவல்துறையின் பிரதிநிதிகளுடன் இணைந்து, கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஏனைய கழிவுகளை அகற்றியதால், இந்த திட்டம் கடலோர சூழலின் இயற்கையான ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க உதவியது.
நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கத்தை உருவாக்குவதில் இந்த வகையான ஒத்துழைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று MI Finance வலியுறுத்தியது. Clean Ocean Force லங்கா மற்றும் இலங்கை காவல்துறையுடன் இணைந்து பணியாற்றியமை இந்த முயற்சியை வலுப்படுத்த உதவியது, இதனால் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கடலோர சூழலுக்கு கூட்டாக பங்களிக்க முடிந்தது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க கைகோர்த்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், Clean Ocean Force லங்கா (COF) மற்றும் இலங்கை காவல்துறைக்கும் MI Finance தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.


