நிலையான விவசாயத்தை ஊக்குவிக்க 'குளோரியஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்துடன் MI Finance புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கையில் நிலையான விவசாயத் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான 'குளோரியஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதை MI Finance மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

அதிக இலாபம் தரும் விவசாயத் திட்டங்கள், மேம்பட்ட பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான முதலீடுகளுக்குப் புதுமையான நிதித் தீர்வுகளை எளிதாக்குவதன் மூலம், நிலையான விவசாயத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் இந்த உத்திசார் கூட்டாண்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், தொழில்முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் முதலீட்டாளர்களை வலுப்படுத்துவதோடு, இலங்கையின் விவசாயத் துறையில் மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் மீள்தன்மைக்கு பங்களிப்பதையும் MI Finance மற்றும் குளோரியஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (UN SDGs) - குறிப்பாக இலக்கு 2 (பசி ஒழிப்பு), இலக்கு 8 (கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி), இலக்கு 9 (தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு) மற்றும் இலக்கு 13 (காலநிலை நடவடிக்கை) ஆகியவற்றுடன் - இணக்கமாக அமைந்துள்ள இந்தக்கூட்டுமுயற்சியானது, நிலையான வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பொருளாதார வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

MI Finance மற்றும் குளோரியஸ் ஹோல்டிங்ஸ் ஆகியன ஒன்றிணைந்து, பொறுப்பான முதலீடுகள் மற்றும் புதுமையான விவசாய நிதியுதவித் தீர்வுகள் மூலம் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும், இலங்கைக்கு மிகவும் நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்க உதவவும் ஆவலுடன் உள்ளன.

 

 

தொடர்பு
SiteLock