MI Finance நிறுவனம் சமீபத்தில் தனது பெறுமதிமிக்க 2025/26 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவை நடாத்தியது. சிறப்பைக் கௌரவிக்கவும், மைல்கற்களைக் கொண்டாடவும், இலங்கையின் நிதித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் குறிப்பிடத்தக்க தனிநபர்கள் மற்றும் குழுக்களை அங்கீகரிக்கவும், நிர்வாகத்தையும் ஊழியர்களையும் ஒன்றிணைப்பதாகவும் அமைந்த இந்த மாலை பொழுது மறக்க முடியாத பொழுதாக அமைந்தது.
விருது வழங்கும் விழாவானது, 2025/26 நிதியாண்டு முழுவதும் MI Finance ஊழியர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பையும் புதுமைகளையும் கொண்டாடியது. சிறந்து விளங்கும் தனிநபர் ஊழியர்கள் (முன் அலுவலகம் மற்றும் பின் அலுவலகம்) முதல் உயர் சாதனை படைக்கும் குழுக்களையும், நிதித்துறையில் MI Finance இன் வளர்ச்சி மற்றும் வெற்றிக்குப் பின்னால் உள்ள மனிதர்களையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது. மேலும் இந்த நிகழ்வில், குறிப்பிட்ட நிதித் தயாரிப்புகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய தயாரிப்புகளின் அடிப்படையில் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
2025/26 ஆம் ஆண்டுக்கான விருதுகள், அந்த அமைப்புக்கு குறிப்பிடத்தக்க மைல்கற்களாக அமைந்தன. இலங்கையின் நிதித் துறையில் MI Finance தனது தடத்தை விரிவுபடுத்தி வரும் வேளையில், அடைந்த முன்னேற்றங்களை மீள்பார்வை செய்யவும், எதிர்கால இலட்சிய இலக்குகளுக்கு அடித்தளம் அமைக்கவும் அந்த மாலை ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது. நிறுவனத்தை முன்னோக்கிச் செலுத்தும் கூட்டு முயற்சியைப் பாராட்டி மேடையேறியதுடன், நிதித்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு குழு உறுப்பினரும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி, சிறப்பு, புதுமை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான MI Finance இன் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்தியது.
விருதுகளுக்கு அப்பால், அந்த இரவு அன்பு, தோழமை மற்றும் ஒன்றிணைந்த கொண்டாட்டத்தால் வரையறுக்கப்பட்டது. நன்றியுணர்வு நிறைந்த சூழலில் சக ஊழியர்கள் இணைந்தனர், நட்புறவுகள் வலுப்பெற்றன.
“இந்த மாலை பொழுதை உண்மையிலேயே மிகச் சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்.”
விருதுகள் நிறைவடைந்த நிலையில், MI Finance புது ஆற்றலுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குகிறது. மேன்மையை அங்கீகரிப்பது, தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும் புதுமைக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. MI Finance அனைத்து பங்குதாரர்களையும் இந்தச் சாதனையைக் கொண்டாடவும், 2026/27 ஆண்டு விருதுகள் விழாவை எதிர்நோக்கவும் அழைக்கிறது.