மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் கடன் வசதிகளின் நன்மைகள்
- குறைந்த வட்டி வீதங்கள்
- துரிதமான செயன்முறைகள் மற்றும் இலகுவான நடைமுறைகள்
- தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் வருமான மட்டங்களின் அடிப்படையிலான நெகிழ்வான கொடுப்பனவுத் திட்டங்கள்.
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற் நிறுவனமானது அவசர நிதித் தேவைகளினை ஈடு செய்யும் பொருட்டு பல்வேறு வகையான கடன் வசதிகளிளை வழங்கி வருகின்றது. தனிப்பட்ட முதலீடோ அல்லது ஏதேனும் சடுதியான பணத் தேவைப்பாடோ எதுவாயிருந்தாலும், உங்களுக்குப் பாதுகாப்பான நிதியிடல் தெரிவு மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் மூலமான கடன் வசதியேயாகும்.
மேர்க்கன்டைல் இன்வெஸ்ற்மென்ரிலிருந்து வாகனக் கடனொன்றினைப் பெற்றுக் கொள்வதன் மூலம் உங்களின் பதிய வாகனமொன்றினைக் கொள்வனவு செய்யும் கனவினை நனவாக்கிக் கொள்ளுங்கள். மேலதிக கட்டணமெதுவுமின்றி இலகுவான செயல்முறையில் எமது வாகன கடன் வசதியின் மூலம் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களினைப் பெற்றுக் கொள்ளலாம். வாகனத்தின் பதிவுப் புத்தகம் கடன் வசதிக்கான பிணையாக தேவைப்படுத்தப்படும்.
உங்களின் மீள் கொடுப்பனவு தகுதிநிலையின் அடிப்படையில் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் நிறுவனத்தினால் 2 வகையான தனியாட்களுக்குரிய கடன்கள் வழங்கப்படுகின்றன.
மிகச் சிறந்த முறையில் மீள் கொடுப்பனவுகளினை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கான குறுகிய கால கடன் வசதிகள், வாடிக்கையாளரின் கடன் அடைமானத்தின் அடிப்படையில் கடன் முகாமையாளரினால் தீர்மானிக்கப்படும். முதலுடன் சேர்த்து வட்டித் தொகையும் முழுமையாகச் செலுத்தப்படுமிடத்து, வாடிக்கையாளரானவர் கடனின் இறுமதி மாதம் வரையில் வட்டித் தொகையினை மட்டும் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்.
வாடிக்கையாளரொருவர் குறித்த கடன் வசதிக்கான மீள்கொடுப்பனவினை நிலையான காலப்பகுதியினுள் சமமான தவணைக் கட்டணங்களில் செலுத்தி முடிக்க விரும்புமிடத்து அத்தகைய வசதியானது வாடிக்கையாளரின் கடன் தொடர்பான பதிவுகளினை அடிப்படையாகக் கொண்டு கடன் முகாமையாளரின் தற்துணிபின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், உபகரணைங்கள் அல்லது வேறு ஏதேனும் அடைமானப் பொருட்களுக்கு வழங்கப்படலாம்.
வாடிக்கையாளரானவர் மீள் கொடுப்பனவினை நிலையான காலப்பகுதியினுள் சமமான தவணைக் கட்டணங்களில் செலுத்தி முடிக்க விரும்புவாராயின், ஆதனக் குத்தகை கடன்களுக்கு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற வகையில் உயர் தரத்திலான கடன் வசதியளிக்கப்படும்.
இது முன்னர் விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட எல்லையாக இருக்குமிடத்து முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எல்லையில் கடனைக் குறைக்கின்ற ஓர் முறையாகும். மேற்படி வசதிக்கான வட்டித் தொகையானது மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சராசரி நிறையிடப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஏப்பிரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மீளாய்வு செய்யப்படும்.