மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸ் ஆனது இலங்கையிலுள்ள நிதிக் கம்பனிகளில் மிகவும் நம்பிக்கை வாய்ந்த கம்பனிகளில் ஒன்றாக விளங்குவதுடன் கடந்த 5 தசாப்தங்களுக்கு மேலாக உறுதியான நிதி நிலைப்பாட்டினையுங் கொண்டுள்ளது. இன்று நாம் இலங்கையின் 9 மாகாணங்களிலும் தொழிற்பட்டு வருகின்றோம். மக்கள், பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் என்பவற்றிற்கு பரந்தளவிலான கோட்பாடுகளினை உருவாக்கும் பொருட்டு 1000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எமது முதலீட்டாளர்களுக்கு நிலைபேறானதும் வலுவானதுமான வருமானத்தினை ஈட்டி்க கொடுப்போம் என்ற எமது உறுதி மொழிக்கேற்ப அவர்களின் நிதிசார் தேவைகளினை நிறைவேற்றுவதில் எமது உதவியினைக் கோருகின்ற வாடிக்கையாளர்களுக்கு நாம் எப்போதும் வலுவாதாரமாக இருப்போம். எமது உற்பத்திகள் மற்றும் வியாபாரத் தொழிற்பாடுகளுக்கப்பால் எமது பரந்துபட்ட துறைசார் நிபுணத்துவத்தினை அவர்களுக்கு வழங்குவதனூடாக எமக்கிடையே உறுதியான உறவு முறைகளினைக் கட்டியெழுப்புவோம். எமது முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் கோட்பாடுகளுக்கப்பால், தொழில் வழங்குனர், வரி செலுத்துனர் அவ்வாறே மக்களுடன் நெருங்கிப் பழகும் நிறுவனம், சமூகங்கள் மற்றும் பொது சமூகம் என்ற வகையில், பல்வேறு புதிய திட்டங்களினூடாக நாட்டின் பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றாடல் சார்ந்த நலன் பேணல் நடவடிக்கைகளு்ககு எமது பங்களிப்பினை வழங்கி வருகின்றோம்.
எமது ஒருங்கிணைந்த வியாபார மாதிரி
நாம் நிதி வளம், உள்ளக கட்டமைப்பு, எமது புலமை, திறன் மற்றும் ஊழியப் படையின் பல்வகைத் தன்மை, எமது பண்டக் குறியின் வலிமை, புத்தாக்கத்திற்கான ஆளுமை, மாற்றத்தினை ஆரம்பித்தலும் பின்பற்றுதலும் மற்றும் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சங்கம் விருப்பத்திற்குரிய இயற்கை சுற்றாடலுடன் மிகச் சிறந்த உறவினைப் பேணுதல் என்பன உள்ளடங்கலான மூலதனங்கள் வடிவிலான மூலவளங்களின் எண்ணிக்கையில் தங்கியுள்ளோம். இத்தகைய மூலவளங்கள் எமது வியாபார நடவடிக்கைகளிலிருந்தான வருமானத்தினைப் பெருக்கிக் கொள்வதற்கு எமக்கு உதவுகின்ற பல்வேறு வியாபார நடவடிக்கைகளினூடாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எமது வியாபார நடவடிக்கைகளுடன் இணைந்ததான எமது மூலோபாயமானது அவற்றினை வியாபார பெறுபேறுகள் மற்றும் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய “கோட்பாடு” என நாம் அழைக்கும் தாக்கங்கள் அத்தகைய மூலவளங்களை நிலைமாற்றுகின்றன.
விளக்கப்படத்தைக் காண்க - எமது கோட்பாட்டு உருவாக்க மாதிரி