கண்ணோட்டம்
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் திட்டமிடப்பட்ட வளர்ச்சிப் பாதையானது அதன் நிதிசார் ஆற்றலானது வளர்ச்சியடைந்து செல்வதனைப் பிரதிபலிக்கின்றது. கடன் துறையின் வளர்ச்சியில் சில மந்த நிலையினைக் கொண்டுள்ள போதிலும் போட்டிச் சூழலில் எமது நிதி மூலதன அதிகரிப்பில் நாம் மிகப் பெரிய வளர்ச்சியினைக் கண்டுள்ளோம். 2017 இல் துறைசார் இலாப நிலையானது வீழ்ச்சியடைந்த போதிலும், மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் ஆனது வரிக்குப் பிந்திய மற்றும் முந்திய இலாபத்துடனான தேறிய வட்டி வருமானத்தில் கணிசமானளவு வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. எமது நிதிசார் நிலையினை மேலும் வலுவாக்குவதற்கு நாம் எண்ணியுள்ளதுடன் எதிர்கால வியாபார மூலோபயங்களில் கவனம் செலுத்துவதனூடாக மிகப் பெரிய இலாப எல்லையினை அடைவதற்கும் திட்டமிடப்பட்ட பொருளாதார மற்றும் துறைசார் சம்பாத்தியங்களை மூலதனமாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
2018/19 நிதியாண்டுக்கான வருடாந்த அறிக்கைக்கான இணைப்பு
நோக்கு வரைபு நிதி மூலம்
கண்ணோட்டம்
நாம் வருமானம் மற்றும் அக்கறைதாரர்களின் சம்பாத்தியம் என்பவற்றினை நீண்ட கால அடிப்படையில் மேம்படுத்தும் நோக்குடன் எமது சந்தையின் பௌதீக ரீதியான உள்ளக கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றில் மேபாட்டினை ஏற்படுத்தும் வகையில் நெறிப்படுத்துகின்றோம். எமது உள்ளக கட்டமைப்பு உருவாக்க செயல்முறையானது சந்தைகளுக்குள் உட்பிரவேசிப்பதற்கான துணை வியாபார வழிகளினைக் கண்டறிதல், வினைத்திறனை அதிகரித்தல் என்பனவற்றின் மூலம் கம்பனிக்கான கட்புலனாகும் அவ்வாறே கட்புலனாகாத சம்பாத்தியங்களை பெருப்பிக்கும் அதேவேளையில் உள்ளக கட்டமைப்பின் தொழிற்பாட்டு ஆற்றலினையும் மேம்படுத்துகின்றது.
நோக்கு வரைபு உள்ளக கட்டமைப்பு
கண்ணோட்டம்
வர்த்தகசார் அல்லது சமூக ரீதியான எமது கூட்டமைப்புக்கள் வெற்றிகரமான தீர்வுகளினை வழங்குதல் மற்றும் எமது “பங்கெடுத்த வளர்ச்சி” முன்மொழிவுகளை பிரயோகித்தல் என்பவை குறித்து உறுதியான உறவுகளினைக் கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன. எமது சமூக கூட்டமைப்புக்கள் வலுவான வியாபாரம் நோக்கிலும் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்ததொரு எதிர்காலத்தினை ஏற்படுதுவது தொடர்பிலும் எமது வர்த்தகசார் கூட்டமைப்புக்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன..
2018/19 நிதியாண்டுக்கான வருடாந்த அறிக்கையில் கூட்டமைப்புக்களுக்கான இணைப்புக்கள்.
சமூக தாக்க மேலாண்மை
கண்ணோட்டம்
புலமை என்பது எமது அறிவு, தலைமைத்துவம் மற்றும் வேலைப்படை அறிவு, எமது சர்வதேச செயல்முறைகளின் வினைத்திற்னகளை விரிவாக்குதல் மற்றும் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் பண்டக்குறியினை வலுவூட்டுதல் என்பவனவற்றினை ஒன்று திரட்டிய ஓர் தொகுப்பாகும். இது எமது பண்டக் குறி மிகவும் வலிதானதொன்று என பல்லாண்டு காலமாக நாம் பெற்றுக் கொண்ட எமது வியாபார, நீண்டகால மதிநுட்பம் போன்ற கற்பனை உள்ளீடுகளினைப் பிரதிபலிக்கின்றது.
கண்ணோட்டம்
நாலம் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையினை அளிப்பதற்கான போட்டி அநுகூலத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக எமது ஊழியர்களின் மிகச் சிறந்த ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்கின்றோம். நாம் எமது நிறுவனத்தினை அதன் அபிலாசைகளினை நோக்கியதாக முன்னெடுத்துச் செல்வதற்கு எமது ஊழியர்களின் திறன்கள், அநுபவம் மற்றும் ஆற்றல்களினை மிகத் திறம்பட பயன்படுத்திக் கொள்கின்றோம். எமது இணையில்லா வேலைக் கலாச்சாரமானது எமது ஊழியர்களினை அவர்களுக்குரிய துறைகளில் ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கு அவர்களைக் கவருகின்றது, வேலைவாய்ப்பினை வழங்குகின்றது மற்றும் இலக்கினை நோக்கி அழைத்துச் செல்கின்றது டன் தனிப்பட்ட மற்றும் சமூக அபிலாசைகளினை நிறைவேற்றுவதற்கான பணம் சார்ந்த நியதிகளுக்கப்பால் அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளினையும் வழங்குகின்றது.
2018/19 நிதியாண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மனித வலுவுக்கான இணைப்பு
கண்ணோட்டம்
எமது நாளாந்த வியாபாரத் தொழிற்பாடுகளின் போது, எமது அக்கறைதாரர்களுக்கு மிகச் சிறந்த சேவையினை வழங்குவதற்காக பொருட்கள், சக்தி, நீர் , இடவசதி மற்றும் எமது சுற்றுப் புறச்சூழல் என்பவற்றினை வினைத்திறனுடன் பயன்படுத்தி வருகின்றோம். பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டு நிறுவனம் என்ற வகையில் நாம், இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வருகின்றோம். நடுநிலையாகச் செயற்படும்எமது அபிலாசைகளினை அடையும் நோக்கில் எமது செயற்பாடுகளினை முன்னெடுக்கும் வகையில் எமது வியாபாரச் செயற்பாடுகளில் நாம் பச்சை எண்ணக்கருக்களினைப் பின்பற்றி வருகின்றோம். சமூகப் பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டு நிறுவனம் என்ற வகையில், சமூகத்திற்கான எமது மதிப்பினை உருவாக்கும் பொருட்டு எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக நாம் எமது வர்த்தகசார் எல்லைகளுக்கப்பால் தொழிற்பட்டு வருகின்றோம்.
2018 / 19 நிதியாண்டிற்கான இணைப்பு
சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு முகாமைத்துவம்